தலைப்பு செய்திகள்
திருப்பூர் உடுமலைப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றம் (லோக்தலாத்) தின் சார்பில் நிலுவையுள்ள வழக்குகளை விரைவாக முடிக்க ஆலோசனை கூட்டம் .
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் சார்பில் சார்பு நீதிமன்ற வளாகத்தில் வருகின்ற 12. 03. 2022 மக்கள் நீதிமன்றம் (லோக்தலாத்) தின் சார்பில் நிலுவையுள்ள வழக்குகளை விரைவாக முடிக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான திரு. மணிகண்டன் அவர்களும், குற்றவியல் நீதித்துறை நடுவர் திரு. பாக்கியராஜ் மற்றும் உடுமலைப்பேட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜயகுமார் அவர்களும் காவல் துறை துணை காவல் கண்காணிப்பாளர் சங்கத்தலைவர் ஸ்ரீதர், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இன்சூரன்ஸ் கம்பெனி வழக்கறிஞர்களும் மற்றும் மடத்துக்குளம் உரிமையியல் மற்றும் தேன்மொழிவேல் அவர்களும், வக்கீல் திரு. சேதுராமன், திரு. ரவிச்சந்திரன் மற்றும் இன்சூரன்ஸ் கம்பெனி மேலாளர்களும், அனைத்து வங்கி மேலளார்களும் உடுமலைப்பேட்டை அனைத்து காவல்துறை இன்பெக்டர்களும் வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.