தலைப்பு செய்திகள்
நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்பு முடிந்தவுடன் திமுக கவுன்சிலர்கள் 3 வேன்களில் வெளியூர் பயணம்.
நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்பு முடிந்தவுடன் திமுக கவுன்சிலர்கள் 3 வேன்களில் வெளியூர் பயணம்-குடும்பத்தினர் வழியனுப்பி வைத்தனர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று நாகர்கோவில் மாநகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பதவி ஏற்பு நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து பதவி ஏற்பு முடிந்த மறுகணமே திமுகவினர் மூன்று வேன்களில் திமுக கவுன்சிலர்களை அழைத்துக்கொண்டு வெளியூர் புறப்பட்டு சென்றனர், இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் திமுக கவுன்சிலர்களின் குடும்ப உறுப்பினர்கள் டாட்டா காட்டி வழி அனுப்பி வைத்த சம்பவம் மற்ற கவுன்சிலர்கள் மத்தியில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது,மேலும் கடந்த வாரம் வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி அறிவிப்பு வெளியாகிய நிலையில் திமுக வெற்றி வேட்பாளர்களை அவசரம் அவசரமாக வெளியூர் அழைத்து சென்றனர்.
அதவாது நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 52 வார்டுகளில் திமுக 24 வார்டுகளில் கூட்டணிக் கட்சிகள் 7 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ள நிலையில் பெரும்பான்மையை கையில் வைத்திருக்கும் திமுக கவுன்சிலர்களை வெளியூர் அவசரமாக அழைத்து செல்லும் நிலையை பார்த்தால் குதிரை பேரத்திற்கு வழி வகுத்து விடும் பயத்தில் திமுகவினர் கவுன்சிலர்களை வெளியூர் அழைத்து செல்வது ஆச்சிரியமாக உள்ளது என நாகர்கோவில் மாநகராட்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.