தலைப்பு செய்திகள்
உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் 26 அடி உயர கொடிமரம் பிரதிஷ்டை.
உடுமலை அருகே உள்ள தளி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் 26 அடி உயர கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
உடுமலை திருப்பதி என அழைக்கப்படும் வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரும் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது வெங்கடேச பெருமாள் கோவிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டு கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.இதை முன்னிட்டு கோயிலின் முன்பாக இருபத்தி ஆறு அடி உயர ஒரே கல் தூண் கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் விழா நடைபெற்றது கருடாழ்வார் என்ற கருடன் பெருமாள் வாகனமாக இருக்கிறார் அவரே பெருமாளின் கொடியாகவும் ஏற்று வணங்கப்பட்டு வருகிறார் வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் இடம் பெறுவார் என கருடனை பெருமாள் வாழ்த்தி ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. பெருமாளின் கொடியிலும் கருடாழ்வார் உள்ளது. பெருமாள் கோயில் முன்பு அமைக்கப்படுகின்ற கொடி மரமானது கருட ஸ்தம்பம் அல்லது துவஜஸ்தம்பம் என அழைக்கப்படுகிறது. மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள் பெருமாளுக்கும் கருடாழ்வாருக்கு நடத்தப்பட்டு வருகிறது.