தலைவன் கோட்டையில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவில் அமைந்துள்ளது தலைவன்கோட்டை கிராமம். ஏராளமான பொதுமக்கள் வசித்து வரும் இப்பகுதியில் தனியார் நிறுவனம் குடியிருப்பு பகுதிகளில் செல்போன் டவர் அமைப்பதற்கு முயற்சி செய்து வருகிறது.
இதனை அறிந்த அந்த ஊர் பொதுமக்கள் செல்போன் டவரின் அலைக்கதிர்வீச்சினால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இது சம்பந்தமாக தலைவன்கோட்டை பஞ்சாயத்தில் செல்போன் டவர் அமைக்கப்படக்கூடாது என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மணிகண்டன் என்பவர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர், கூடுதல் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
பொது மக்களின் எதிர்ப்பால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.