திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க தலைவர் பாலமாதவன் தலைமையில் மனு கொடுத்தனர்.
திருச்சி மாவட்டத்தில் சுமார் 200400 மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளதாகவும், நாங்கள் மணல் எடுத்து விற்பனை செய்து அதில் வரும் வருவாயை வைத்து பிழைத்து வருவதாகவும்,
தற்போது மணல் குவாரியில் மாட்டு வண்டியில் மணல் எடுக்க ஆன்லைன் பதிவு முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு இதனை மாற்றி லாரிகளுக்கு உள்ளது போல் ஃப்ரீ டிராக் முறையினை மாட்டு வண்டி களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும்,
மேலும் மாட்டு வண்டிகளுக்கு புதிய கட்டணமாக 700 வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவே எங்களின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு பழைய கட்டணமான 224 வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க கோரியும், தற்போது மணல் எடுக்க குவாரியில் காலை 10 மணிக்கு மேல் அனுமதிப்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து மணல் எடுப்பதற்குள் மாடுகளும் நாங்களும் சோர்ந்து விடுகிறோம்.
ஆகவே இந்த நேரத்தை மாற்றி காலை 7 மணிக்கு முன்பாக மாற்றம் செய்து மணல் எடுக்க அனுமதிக்குமாறு அந்த மனுவின் வாயிலாக மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர்.
