திருச்சி விமான நிலைய புது முனையம் கட்டுமான பணிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு பெறும் – திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குனர்.

திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி, பாதுகாப்பு, பயணிகள் சேவை, சுங்கத்துறை, உணவு உள்ளிட்ட 32 அம்சங்களின் அடிப்படையில்,..
சீனா, ஜப்பான், பங்களாதேஷ் உள்ளிட்ட பசிபிக் ஆசிய நாடுகளில் உள்ள 48 விமான நிலையங்களில் சிறந்த விமான நிலையமாக விமான நிலைய சேவை மற்றும் தன்னிச்சையான அமைப்பு நடத்திய கணக்கெடுப்பின்படி 2 மில்லியன் பயணிகள் வந்து செல்லும் விமான நிலையங்களில் சிறந்த விமான நிலையமாக
திருச்சி விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து விமான நிலைய அதிகாரிகள் இந்த விருது பெறுவதற்கு பங்களிப்பை அளித்துள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் புது முனையம் கட்டும் பணிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் சென்னைக்கு உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மும்பைக்கு புதிதாக விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்சி விமான நிலைய சுங்கத்துறை செயல்பாடுகளில் குறைகள் உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. விரைவில் குறைகள் களையப்படும்.
விமான ஓடுதள விரிவாக்க பணிகளுக்காக 345 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு தற்போது வரை 41 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்து.
திருச்சி விமான நிலைய கார்கோ மூலம் நாளொன்றுக்கு 20 மெட்ரிக் டன் சரக்கு கையாளப்படுகிறது. கடந்தாண்டு 1. 72 மில்லியன் டன் சரக்கு கையாளப்பட்ட நிலையில் இவ்வாண்டு இதுவரை 1.03 மில்லியன் சரக்கு கையாளப்பட்டு வருகிறது. கடந்தாண்டை விட இவ்வாண்டு கூடுதலாக சரக்கு கையாள வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.