BREAKING NEWS

திருச்சி

திருச்சி தா.ப்பேட்டை பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டதால் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள தா.ப்பேட்டை பேரூராட்சியில்
15 வார்டுகளுக்கு போட்டியிட 50 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர் நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது 8வது வார்டில் திமுக சார்பில் கருணாநிதியும் அதிமுக சார்பில் இளங்கோ என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

அதிமுக வேட்பாளர் இளங்கோ உறுதிமொழி படிவத்தை இணைக்காததால் அவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் காரணமாக 8வது வார்டில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிகாரபூர்வமாக இவர் வெற்றி பெற்றது வாக்கு எண்ணும் தினத்தன்று அறிவிக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று வேட்பு மனுவைத் திரும்ப பெறுதல் நடைபெறுகிறது.
தொடர்ந்து 9ஆம் தேதி போட்டியிடும் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )