திருநெல்வேலி மாவட்டத்தில், திசையன்விளை உலக இரட்சகர் ஆலய திருவிழாவில் சப்பரபவனி நடந்தது.

திசையன்விளை உலக இரட்சகர் ஆலய திருவிழா. நகர வீதிகளில் சப்பர பவனி.
திசையன்விளை உலக இரட்சகர் ஆலயம் இப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ பேராலயங்களில் முக்கியமானதாகும். வருடம் தோறும் இங்கு திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 2 ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பேரருட்திரு பன்னீர் செல்வம் தலைமை வகித்து ஜெபம் செய்து கொடியேற்றி திருவிழா வை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அருட்திரு.லெனின் டிரோஸ் மறையுரை நிகழ்த்தினார்.
திருவிழா காலங்களில் ஆலயத்தில் தினசரி காலை செபமாலை மற்றும் திருப்பலி மாலையில் மறையுரை மற்றும் நற்கருணை ஆசிர் இரவில் கிறிஸ்தவ கலைநிகழ்ச்சிகள் நடந்தது.. எட்டாம் திருவிழா அன்று மாலையில் நற்கருணை பவனியும்,இரவில் கிறிஸ்தவ இன்னிசைக்கச்சேரி நடைபெற்றது.
நேற்று முன்தினம் ஒன்பதாம் நாள் திருவிழா அன்று சனிக்கிழமை காலையில் அருட்திரு டொமினிக் அருள் வளன் தலைமையில் செபமாலை, திருப்பலி யும்,மாலையில் கோட்டாறு முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நடந்தது இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.இரவில் ஆலயத்தைசுற்றி சப்பரபவனி நடைபெற்றது.
திருவிழாவின் பத்தாம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு பாளையங்கோட்டை புனித சவேரியார் கலைமனைகள் பேரருட்திரு ஹென்றி ஜெரோம் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. பிற்பகல் 3 மணி நகர வீதிகளில் உலக இரட்சகரின் சப்பர பவனி நடந்தது.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற உலக இரட்சகரின் சப்பரபவனி க்கு ஜாதி மதம் பாராது அனைத்து மக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். உலக இரட்சகருக்கு மாலைகள் சாத்தியும் ,நேர்த்தி கடனாக உப்பு மிளகு செலுத்தி யும் வழிபட்டனர். பலர் தங்கள் குழந்தைகளை உலக இரட்சகரின் பாதத்தில் வைத்து ஆசிர்வாதம் பெற்றனர்.
வாண வேடிக்கைகளும் நடந்தது. திருவிழா ஏற்பாடுகளை திசையன்விளை பங்கு தந்தை மற்றும் திருத்தல அதிபர் அருட்திரு அந்தோணி டக்ளஸ் ,பங்கு பேரவை,அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.
