திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி கிராம பஞ்சாயத்தில் கால்வாய் பணியினை சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி கிராம பஞ்சாயத்தில் கால்வாய் பணியினையும், ஜல் ஜீவன் குடிநீர் இணைப்பு திட்டத்திற்கும் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் குளம், குட்டை,ஏரி என அனைத்து நீர் தடங்களும் நிரம்பி வழிகின்றன. மேலும் உபரி நீர் அதிகமாக வீணாக செல்வதால் விவசாய பயன்பாட்டிற்க்கு பயனில்லாமல் போகிறது.
ஆகவே நீர் நிலைகளை பாதுகாத்து உபரி நீர்நிலை சரியான கால்வாய் உருவாக்கி அதனை பயன்பெறும் விதமாக எலவம்பட்டி பகுதிகளுக்கு உட்பட்ட நூலகம் எதிரில் துவங்கி சிலம்பு நகர், வடக்கு மேடு, செல்ரப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள சிறு சிறு ஏரி குட்டைகளின் உபரி நீரினை பயன்படுத்தப்படும் விதமாக ஊராட்சி மன்ற தலைவர் திருமதி மேனகா விவேகானந்தன் கோரிக்கை வைத்ததின்பேரில் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
உடன் வேளாண்மைத் துறை அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் சேர்மென் திருமதி முருகன், கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் வழக்குரைஞர் K A குணசேகரன், தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன் M.Com.,M.Ed., துணை தலைவர் ஆனந்தன், ஊராட்சி எழுத்தர் ராஜேஷ்குமார், கட்சி நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.