BREAKING NEWS

திருப்பத்தூர் மாவட்டத்தில் காணாமல் போன 37 லட்சம் மதிப்புள்ள 163 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு.

திருப்பத்தூர் மாவட்டத்தில் காணாமல் போன 37 லட்சம் மதிப்புள்ள 163 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன்கள் காணாமல் போனதாக அந்தந்த காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார்கள் பெறப்பட்டு இருந்தன.

 

அந்த புகார்களை பெற்று மனு ரசீது பதிந்து அதன் விவரங்கள் திருப்பத்தூர் மாவட்ட சைபர் செல் பிரிவில் மேல்நடவடிக்கைக்காக அனுப்பியிருந்ததின் பேரில் மேற்படி மனுக்களை துரிதமாக விசாரணை மேற்கொண்டு 163 செல்போன்களை கண்டுபிடித்துள்ளனர்.

அதன் மொத்த மதிப்பு ரூபாய் 37 லட்சத்து 49 ஆயிரம் ஆகும் (Value Rs.37,49,800/-) இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் செல்போன்களின் உரிமையாளர்களுக்கு முறைப்படி தகவல் தரப்பட்டது.

 

 

இதைத்தொடர்ந்து இன்று 22.11.2022 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திருப்பத்தூர் அருகில் உள்ள நந்தினி மஹாலில் சமூக இடைவெளியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் மீட்கப்பட்ட 163 செல்போன்களையும் அதன் உரிமையாளர்களிடம் நேரடியாக வழங்கினார் .

 

அப்போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன் B.V.Sc அவர்கள் சட்டவிரோதமாக திருட்டு செல்போன்களை விற்பனை செய்வதும், அதை வாங்கி சிம்கார்ட் போட்டு உபயோகிப்பதும் சட்டப்படி குற்றம் ஆகும்.

 

இது போன்ற செயல்களில் யாரேனும் ஈடுபடுவது சம்மந்தமாக எந்த ஒரு தகவல் கிடைக்கப்பெற்றாலும் உடனடியாக அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். மேலும் 24*7 காவல் கண்காணிப்பாளர் அலுவலக காவல் உதவி எண் / வாட்ஸ்ஆப் எண் 9442992526-ற்கு புகார்கள் தெரிவிக்கலாம். புகார்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.

 

 

இந்த வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு செல்போன்களை கண்டறிந்து மீட்ட தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் பிரபு, சைபர் செல் பிரிவு காவலர்கள் தேன்மொழி மற்றும் சதீஷ் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் மற்றும் பணவெகுமதி வழங்கப்பட்டது.

 

 

இந்நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ், வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன், திருப்பத்தூர் டிஎஸ்பி கணேஷ், ஆயுதப்படை டிஎஸ்பி வினாயகம், ஆம்பூர் டிஎஸ்பி சரவணன், வாணியம்பாடி காவல் ஆய்வாளர் நாகராஜன், கந்திலி காவல் ஆய்வாளர் சுரேஷ், மங்கையர்க்கரசி, ஜெய்கீர்த்தி துரைராஜ் மற்றும் சைபர் க்ரைம் ஆய்வாளர் பிரேமா, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சீனிவாசன் உட்பட காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

செல்போன்களை பெற்றுக்கொண்ட உரிமையாளர்கள் மகிழ்வுடன் காவல்துறையினரை பாராட்டினார்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )