BREAKING NEWS

திருவள்ளூர் மாவட்ட அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்ட அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், தமிழகம் முழுவதும் அரசு கேபிள் செட் டாப் பாக்ஸ் இல் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த மூன்று தினங்களாக தமிழ்நாட்டில் அரசு கேபிள் இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இணைப்பு இல்லாமல் தொலைக்காட்சி பார்ப்பது பாதிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் திருவள்ளூர் மாவட்ட கேபிள் ஆபரேட்டர்கள் ஒன்றிணைந்து துண்டிக்கப்பட்டுள்ள அரசு கேபிள் இணைப்பை உடனடியாக வழங்க வேண்டும் அரசு கேபிளுக்கு மாற்றாக தனியார் இணைப்பினை கொண்டு வர வேண்டும் என்ற திட்டத்தை கைவிட வேண்டும் மென்பொருள் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய வாக்கிய தொகையை தமிழக அரசு உடனடியாக கட்டி மீண்டும் அரசு கேபிள் இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

திருவள்ளூர் எல்ஐசி அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )