BREAKING NEWS

திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற காமராஜரின் 120 பிறந்தநாள் விழா.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற காமராஜரின் 120 பிறந்தநாள் விழா.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட சார்பில் ஜூலை 15 கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120 பிறந்தநாள் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் A G .சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது.

இதில் காமராஜர் ஆட்சி செய்த சாதனைகளை குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது அப்பொழுது பேசிய திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் காமராஜர் என்று கூறும்போது கர்ம வீரர் காமராஜர் என்றுதான் கூறத் தோன்றும்.

நம்மை அறியாமலும் அந்த வார்த்தை நம்முடன் ஒட்டிக் கொள்ளும். அந்தளவிற்கு தமிழகத்திற்கு தன்னுடைய அரிய பணிகளை விட்டுச் சென்றுள்ளார். தமிழ் சமுதாயத்தை தொலை நோக்குப் பார்வையுடன் பார்த்து, கல்வி அறிவை கொடுத்து சென்றவர். குழந்தைகள் படிப்பதற்கு அவர் போட்ட விதைதான் இன்று தமிழகத்தில் கல்வி சதவீத வளர்ச்சிக்கு காரணம் என்றுகூட கூறலாம்.

இன்று அவரது பிறந்த நாள். 1903ல் பிறந்து 1975ம் ஆண்டு மரணம் அடைந்தார். தமிழகத்தின் மூன்றாவது முதல்வராக பணியாற்றியவர். கருப்பு காந்தி என்று அன்பாக மக்களால் அழைக்கப்பட்டவர். இவர் முதல்வரான பின்னர் வயல் வெளி வழியாக சென்று கொண்டு இருந்தார்.

அப்போது பெற்றோருடன் குழந்தைகளும் வயல் வெளியில் வேலை செய்வதைப் பார்த்தார். உடனே அங்கு தனது காரை நிறுத்திவிட்டு ஏன் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என்று கேட்டார். சதா அதே சிந்தனையுடன் சென்னைக்கு திரும்பியவுடன் மூத்த அதிகாரிகளை அழைத்தார். பள்ளியில் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்குவதற்கு என்ன செலவு ஆகும் என்ற திட்டத்தை தன் முன் வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அவர்களும் சமர்பித்தனர். அவர்களில் சிலருக்கு சந்தேகமாக இருந்தது. எதற்காக அரசுக்கு இந்த வருமானம் இல்லாத செலவு என்றனர். ஆனால் மதிய உணவு இலவசமாக கொடுத்தால்தான் பிள்ளைகளை பள்ளிக்கு பெற்றோர் அனுப்புவார்கள் என்பது அவரது மனக் கணக்கு. அது சரியாகத்தான் இருந்தது என்றார். அதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் தலைமை தாங்கி ஏ ஜி சிதம்பரம் மாவட்ட தலைவர் மற்றும் திருவள்ளூர் காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் ஜான் சிறப்பு அழைப்பாளர்கள் தேவயானி மாநிலத் துணைத் தலைவர் ஏகாட்டூர் ஆனந்தன் மற்றும் மாவட்ட பொருளாளர் சசிகுமார் அருள்மொழி தேவராஜ் வடிவேல் திவாகர் தளபதி மூர்த்தி சரவணன் பூண்டி ராஜா விக்டர் ரவிச்சந்திரன் அருள் தமிழ் பழனி முகுந்தன் சிவசங்கர் புருஷோத்தமன் மணவாளன் காளி ராவணன் மற்றும் ராமன் மற்றும் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )