தீயிலிருந்து எவ்வாறு வனப்பகுதியையும் பொதுமக்களை மீட்பது உள்ளிட்ட செய்முறை விளக்கம் போடிநாயக்கனூரில் வனத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் வனத்துறை அலுவலகத்தில் வனத்துறையும் தீயணைப்புத் துறையும் இணைந்து பொதுமக்களுக்கு வானத்தை எவ்வாறு பாதுகாப்பது தீயிலிருந்து எவ்வாறு வனப்பகுதியையும் பொதுமக்களை மீட்பது உள்ளிட்ட செய்முறை விளக்கம் ஆனது பொதுமக்களுக்கு தீயணைப்பு துறை சார்பாக நடத்தி காட்டப்பட்டது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் தீயணைப்பு துறையும் வனத்துறையும் இணைந்து பொதுமக்களுக்கு வனங்களில் தீப்பிடித்தால் எவ்வாறு தீயினை அணைக்க வேண்டும் என்றும் தீயில் மாட்டிக் கொண்டவர்களை ஆபத்து காலத்தில் எவ்வாறு மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு செய்முறை விளக்கமானது தீயணைப்பு துறை சார்பாக விளக்கிக் காண்பிக்கப்பட்டது.
இதில் அடிபட்டவர்களை எவ்வாறு மீட்டு கொண்டு வர வேண்டும் என்றும். தீ பரவினால் அதனை எவ்வாறு கையாண்டு தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் உள்ளிட்ட பல்வேறு விளக்க செய்முறையானது தீயணைப்புத்துறை சார்பாக செய்து காட்டப்பட்டது.
தீயணைப்புத் துறை அதிகாரி சக்திவேல் தலைமையிலான குழு வனத்துறை அதிகாரி ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் செய்முறை காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வனப்பகுதியை சார்ந்துள்ள மக்கள் எவ்வாறு தங்களை ஆபத்துக் காலத்தில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தீயணைப்பு துறை சார்பாக நடத்தப்பட்ட ஒத்திகை நிகழ்வை கண்டு தெரிந்து கொண்டனர்.