BREAKING NEWS

தூத்துக்குடியில்: 2 மாணவர்கள்.. 2 ஆசிரியர்கள்.. இருக்கக்கூடிய பள்ளிக்கூடத்திற்கு 1 ஹச் எம்!

தூத்துக்குடியில்: 2 மாணவர்கள்.. 2 ஆசிரியர்கள்.. இருக்கக்கூடிய பள்ளிக்கூடத்திற்கு 1 ஹச் எம்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அரசு உதவிப் பெறும் பள்ளிக்கூடம் ஒன்று வெறும் இரண்டு மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்களுடன் செயல்பட்டு வருவது கவனத்தை ஈர்த்துள்ளது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே கொண்ட இந்தப் பள்ளியில், தற்போது இரண்டே இரண்டு மாணவர்கள் மட்டுமே பயின்று வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் அருகே மேலசாத்தான்குளத்தில் அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடம் மற்ற பள்ளிகளை போல் இல்லாமல் மாணவர்களே இல்லாமல் அதிசய பள்ளியாக இயங்கி வருகிறது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே கொண்ட இந்தப் பள்ளிக்கூடத்தில், தற்போது இரண்டே இரண்டு மாணவர்கள் மட்டுமே பயின்று வருகிறார்கள்.

ஒரு வகுப்பில் அல்ல மொத்தத்திற்கே அதாவது 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக்கூடத்தில் 2 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகிறார்கள். இந்த பள்ளிக் கூடத்திற்கு ஒரு தலைமை ஆசிரியரும், ஒரு ஆசிரியரும் பணிபுரிந்து வருகிறார்கள். ஒரு சமையலர் பணிபுரிந்து வருகின்றார். 3 மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கூடத்திற்கு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த பள்ளிக்கூடத்திற்கு சென்று பார்த்தபோது ஒரு வகுப்பறையில் ஒரே ஒரு மாணவன் மட்டுமே இருந்துள்ளான். அவருக்கு பெண் ஆசிரியை ஒருவர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்.

பள்ளிக்கூடத்தின் மற்ற வகுப்பறைகள் எல்லாம் காலியாக கிடந்தன. தலைமை ஆசிரியர் அறையில் ஒரு மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தது.

தலைமை ஆசிரியர் ஹெர்பன்சிங் அமர்ந்திருந்தார். இது பற்றி அவர் கூறுகையில், பள்ளிக்கூடத்தில் 3 மாணவர்கள் மட்டுமே இருப்பதாகவும், அதிலும் 2 பேர் வரவில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.

தலைமை ஆசிரியர் ஹெர்பன்சிங் மேலும் கூறுகையில், இந்த பள்ளிக்கூடத்தில் முன்பு 35 மாணவர்கள் பயின்று வந்தனர். ஆனால், பள்ளி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சனைகளால் தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டேன் என்றும், அப்போது பல மாணவர்கள் வேறு பள்ளிக்கூடத்திற்கு மாறிவிட்டனர். தற்போது மீண்டும் இதே பள்ளிக்கு நான் திருப்பியிருக்கிறேன். 3 மாணவர்கள் தான் பள்ளிக்கு வருவார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

இரு மாணவர்களில் ஒருவன் கோவில் கொடை விழாவிற்காக வரவில்லை. இப்போது ஒரே ஒரு மாணவனுக்கு ஆசிரியை பாடம் நடத்துகிறார். மீண்டும் மாணவர்கள் சேர்ந்து படிக்க வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் கூறினார்.

சமூக ஆர்வலர்கள் பலரும் இந்த பள்ளிக்கூடத்தையை பார்த்து வியந்து போயுள்ளனர். ஒரு மாணவருக்காக ஒரு பள்ளிக்கூடம் என்பது வியப்பை அளிக்கின்றது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்றும், பள்ளியில் மற்ற மாணவர்களை சேர்க்க ஏன் யாரும் ஆர்வம் காட்டவில்லை. இல்லையெனில் கல்வித்துறைக்கு இதுபற்றி தெரிவித்து கூடுதல் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதேபோன்று தனிமையில் பயிலும் மாணவர்களுக்கு இது மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடும். மற்ற மாணவர்களோடு அமர்ந்திருந்து படித்தால் தான் மாணவர்களுக்கு கல்வியோடு மற்ற அறிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்றும், இது அங்கு படிக்கும் மாணவர்களுக்கே ஒருவித குறைபாடாக கூட அமையும் என தெரிவித்துள்ளனர்.

இது டயாசிசன் பள்ளிக்கூடம் என்பதால் கல்வி அதிகாரியாக உள்ள எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது நோட்டீஸ் மட்டுமே அனுப்ப முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS