BREAKING NEWS

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் ரயில்வே ஆர் எம் எஸ் அலுவலகத்தில் மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது!

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் ரயில்வே ஆர் எம் எஸ் அலுவலகத்தில் மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது!

 

தஞ்சாவூர் ரயில்வே மெயில் சர்வீஸில் பணிபுரியும் ஊழியர்கள், அஞ்சலக ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயிலடி பகுதியில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்யும் ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் ரயில்வே மெயில் சர்வீஸ் மற்றும் தஞ்சாவூர் கேன்சர் செண்டர் இணைந்து மிகப் பெரிய மருத்துவ முகாம் ரெயில்வே முதல் நடைமேடை சப்வே அருகில் இன்று 25 .9 .22 ஞாயிறு காலை 9 மணிக்கு நடைபெற்றது.

 

இந்த முகாமில் இருதய பாதிப்பு , மூளை தண்டு வட பாதிப்பு, மார்பு நோய், குழந்தைகள் மருத்துவம், மகளிர் மருத்துவம், பொது மருத்துவம் உள்ளிட்ட நோய்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மருத்துவ முகாமினை தஞ்சாவூர் அஞ்சலக முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார்.

 

 

ரயில்வே அஞ்சலக மெயில் சர்வீஸ் ஆவணக்காப்பாளர் இ.செந்தில்குமார் தலைமை வகித்தார். .தஞ்சாவூர் கேன்சர் செண்டர் நிர்வாக அலுவலர் ஜி.மணிகண்டன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ச.மருதுதுரை பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

 

மற்றும் பல்துறை சிறப்பு மருத்துவர்கள் முனியசாமி ,ஜி.டீனா, அனுசுயா, கே. ஜீவானந்தம், மணிவண்ணன் உள்ளிட்ட மருத்துவர்களும் பங்கேற்றனர். இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்கள், ஊழியர்கள், ஆர் எம் எஸ் ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர், அஞ்சலக பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு ஆலோசனைகள் பெற்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )