தூய தெரசா கல்லூரி லியோ சங்கத்துடன் இணைந்து தரங்கம்பாடி கடற்கரையில் பிளாஸ்டிக் ஒழிப்பு தூய்மைப்பணி செய்யப்பட்டது.

மயிலாடுதுறை,
தரங்கம்பாடி தூய தெரசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் ஆகஸ்ட் 2022 சுதந்திரதின அமுதப் பெருவிழாவின் தொடர்ச்சியாக,
இயற்கையை பேணிக்காப்போம்.
சிறப்புத்திட்டத்தின் கீழ் பொறையார் தரங்கை லயன்ஸ் சங்கம், தரங்கம்பாடி தூய தெரசா கல்லூரி லியோ சங்கத்துடன் இணைந்து தரங்கம்பாடி கடற்கரையில் பிளாஸ்டிக் ஒழிப்பு தூய்மைப்பணி செய்யப்பட்டது இதில் கல்லூரியின் செயலர் அருட்சகோதரி கருணா ஜோசபாத், தரங்கை பேருராட்சியின் துணைத்தலைவர் திரு. பொன். ராஜேந்திரன், அரிமா சங்கத்தின் தலைவர் மகா கிருஷ்ணன், அரிமா சங்கத்தின் செயலர், திரு. ஜார்ஜ் லியோ சங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் அரிமா சங்க உறுப்பினர்கள் & லியோ உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
CATEGORIES மயிலாடுதுறை
