தென்மேல் பாக்கத்தில் சிறுத்தை புலி நடமாட்டம் இல்லை.. நாய்கள்தான் என சிசிடிவி கேமரா மூலம் உறுதி..
![தென்மேல் பாக்கத்தில் சிறுத்தை புலி நடமாட்டம் இல்லை.. நாய்கள்தான் என சிசிடிவி கேமரா மூலம் உறுதி.. தென்மேல் பாக்கத்தில் சிறுத்தை புலி நடமாட்டம் இல்லை.. நாய்கள்தான் என சிசிடிவி கேமரா மூலம் உறுதி..](https://aramseithigal.com/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-23-at-11.11.13-AM.jpeg)
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு
செங்கல்பட்டு அருகே சிறுத்தைபுலி நடமாட்டத்தை கண்காணிக்க பொருத்திய கேமராவில் நாய்கள் நடமாட்டம் இருப்பது பதிவாகியுள்ளது. கடந்த ஒருவாரமாக செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கம் கிராமத்தில் மூன்று கன்றுக்குட்டிகள் மர்ம மான முறையில் கடித்து கொல்லப்பட்டது.
இதனால் தென்மேல்பாக்கம் கிராம மக்கள் சிறுத்தைபுலி நடமாட்டம் இருப்பதாக அச்சத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு கால்நடை மருத்துவர், வருவாய்துறை, வனத்துறையினர் நேரில் முகாமிட்டு கன்றுகுட்டிகளை கொல்லப்பட்டதின் மர்மம் குறித்து கண்காணிக்க வனத்துறை சார்பில் இரண்டு கேரமாக்கள் பொருத்தப்பட்டது.
இன்று நான்கு முதல் ஐந்து நாய்கள் மாடுகள் மகன் கன்று குட்டியை கடிக்க முயற்சிப்பது கேமராவில் மிக தெளிவாக பதிவாகியுள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைபற்றி வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே தென்மேல்பாக்கம் கிராமத்தில் சிறுத்தைபுலி நடமாட்டம் இல்லை நாய்கள் கூட்டத்தின் தொல்லைதான் எனவும் கன்றுக்குட்டியை கடித்து கொன்றது நாய்கள்கூட்டம்தான் என வனத்துளையினர் சார்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே மக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என வனத்துறை தெரிவித்துள்ளது
மேலும் நாய்களை கட்டுப்படுத்த கால்நடை மருத்துவ குழுவுடன் இனைந்து பணியாற்ற இருப்பதாகவும் தெரிவித்தனர்.