BREAKING NEWS

தேனியில் கடையில் திடீர் தீ விபத்து.

தேனியில் கடையில் திடீர் தீ விபத்து.

 

தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கொட்டக்குடி ஆற்றுப்பாலம் அருகே பழைய கிருஷ்ணா தியேட்டர் அருகே மூன்று மாடி கொண்ட வணிக வளாகம் உள்ளது.இதில் மூன்றாவது மாடியில், விழாக்களுக்கு அலங்காரம் செய்யும் கடை அமைந்து உள்ளது.

 

இந்தக் கடையை வழக்கம் போல் மாலை நேரத்தில் அடைத்து விட்டு கடை ஊழியர்கள் சென்று விட்டனர். பூட்டிய கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சில நொடிகளில் தீ கொழுந்து விட்டு எறிய துவங்கியது. 

 

 

தீ சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேனி அல்லிநகரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

 

 

ஆனாலும் கடைக்குள் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அலங்கார பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.கடை பூட்டியிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

 

 

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்பது தீயணைப்புத் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

தீ விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )