BREAKING NEWS

தேனி அருகே தனியார் நிதி நிறுவனத்திற்குளே கூலித் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி.

தேனி அருகே தனியார் நிதி நிறுவனத்திற்குளே கூலித் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி.

 

பழனிசெட்டிபட்டி மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள தனியார் நிதி நிறுவனத்திற்குள் நேற்று இரவு கூலித் தொழிலாளி தீக்குளிக்க முயற்சியால் பரபரப்பு.

 

தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுப்பிரமணி (67) . இவர் பழனி செட்டிபட்டியில் மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திற்கு நேற்று இரவு வந்தார்.

 

பின்னர் அந்த நிதி நிறுவன அலுவலகத்திற்குள் நின்றபடியே தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 

 

அப்போது அங்கு இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

 

அப்போது சுப்பிரமணி கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த நிதி நிறுவனத்தில் ரூபாய் 2 லட்சத்து 90 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், அதற்கு வட்டியோடு ரூபாய் 3 லட்சத்து 60 ஆயிரம் செலுத்தி இருப்பதாகவும், இதுவரை 43 தவணை செலுத்தி உள்ளதாகவும் ஆனால் 33 தவணை தான் செலுத்தியதாக ஊழியர்கள் கூறியதாகவும்,

 

மேலும் இந்த கடனை அடைக்க வேண்டி, வேறு இடங்களில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கடன் வாங்கிய தாகவும், ஆனால் மேலும் ரூபாய் 3 லட்சம் செலுத்த வேண்டும் என்று நிதி நிறுவனத்தினர் கூறியதாகவும்.

 

இது தொடர்பாக சில நாட்களாக நிதி நிறுவனத்திற்கு வந்தும் தீர்வு கிடைக்காதால் தற்கொலைக்கு முயன்றதாக விசாரணையில் தெரியவந்தது..

 

பின்னர் போலீசார் அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

 

தனியார் வங்கியில் நுழைந்து கூலி தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

CATEGORIES
TAGS