தேனி சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியில் பூங்காவிற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்த சிறுமி ஹாசினி.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியில் பூங்காவிற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்த சிறுமி ஹாசினி விவகாரம்,
சிறுமியின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் ஒடைப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் நிதியில் இருந்து முன்பணமாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.


மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை சிறுமி ஹாசினியின் பெற்றோரான முத்து சரவணன் மற்றும் கார்த்திகாவிடம் வழங்கினார்.
முடி திருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தேனி மாவட்டம் முழுவதும் இன்று முழுகடை அடைப்பு நடத்தப்பட இருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து காசோலையை வழங்கினார்.
CATEGORIES தேனி
