BREAKING NEWS

தேனி நகராட்சி சார்பாக தேனி ராஜ வாய்க்காலை தூர் வாரும் பணி இன்று துவங்கியது.

தேனி நகராட்சி சார்பாக தேனி ராஜ வாய்க்காலை தூர் வாரும் பணி இன்று துவங்கியது.

தேனி நகரில் முக்கிய பகுதிகளின் வழியே ராஜ வாய்க்கால் செல்கின்றது.

இவ்வாய்கால் பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்த நிலையில் மழை காலங்களில் தேனி நகரின் முக்கிய பகுதிகளில் தேங்கும் மழை நீர் வாய்க்கால் வழியே செல்ல முடியாமல் தேனி நகரின் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கிய வண்ணம் இருந்தது.

 

 

இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர் ராஜவாய்க்காலை தூர்வாரக்கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்த நிலையில் தேனி நகராட்சி சார்பாக ராஜ வாய்க்காலை தூர்வாரும் பணி துவங்கியது.

 

 

 

தூர் வாரும் பணியினை தேனி நகர மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், நகர் மன்ற துணைத் தலைவர் செல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )