தேனி நாடார் சரசுவதி வித்யாலயா பள்ளியில் குழந்தைகள் தின பள்ளியில் நடைபெற்றது.

தேனி செய்தியாளர் முத்துராஜ்.
தேனி எடமால் தெருவில் உள்ள நாடார் சரசுவதி வித்யாலயா பள்ளியில் குழந்தைகள் தினத்தன்று நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி இன்று நாடார் சரசுவதி வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் தலைமையிலும் துணைதலைவர் கணேஷ் முன்னிலையிலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது அதனைதொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பொதுசெயலாளர் ஆனந்தவேல் பொருளாளர் பழனியப்பன் நாடார் சரசுவதி வித்யாலயா கல்வி நிறுவன செயலாளர் நவமணி, நாடார் சரசுவதி வித்யாலயா பள்ளி நிர்வாக இணைச்செயலாளர்கள் தீபகணேஷ் அய்யணமூர்த்தி மற்றும் வித்யாலயா பள்ளி முதல்வர் பூரண செல்வி உள்ளிட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.