தேனி பழைய பேருந்து நிலையத்தில் மத்திய அரசிற்கு எதிராக துண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட சகோதரிகள் கைது.

தேனி மாவட்டம்,
தேனி பழைய பேருந்து நிலையத்தில
மத்திய அரசிற்கு எதிராகவும் பிரதமர் மோடியால் தள்ளுபடி செய்யப்பட்ட 10.72 லட்சம் கோடி கடனை முழுமையாக வசூல் செய்து,

வேலை வாய்ப்பு இன்றி தவிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரக்கோரி சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான நந்தினி மற்றும் அவரது சகோதரி நிரஞ்சனா ஆகியோர் தேனி பழைய பேருந்து நிலையம் பகுதியில் துண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த பாஜகவினர் சகோதரிகள் இருவருக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் துண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு சமூக ஆர்வலர்கள் நந்தினி மற்றும் அவரது சகோதரி நிரஞ்சனாவை தேனி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமருக்கு எதிராக அவதூறு பரப்பி பொய் பிரச்சாரம் செய்யும் சகோதரிகள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி பாஜக தேனி நகர தலைவர் மதிவாணன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பாஜகவினர் காவல்துறையிடம் மனு வழங்கினர்.
