தேனி மாவட்டம் சின்னமனூரில் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் விவசாய கண்காட்சியை நடத்தினார்கள்.
![தேனி மாவட்டம் சின்னமனூரில் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் விவசாய கண்காட்சியை நடத்தினார்கள். தேனி மாவட்டம் சின்னமனூரில் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் விவசாய கண்காட்சியை நடத்தினார்கள்.](https://aramseithigal.com/wp-content/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-30-at-3.47.32-PM.jpeg)
உசிலம்பட்டியில் உள்ள தனியார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் கிராமப்புற தங்கள் பயிற்சி திட்டத்தின் கீழ் சின்னமனூர் பகுதியில் விவசாய நிலங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்து பயிர்களை ஆய்வு மேற்கொண்டு விவசாயப் பணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள்.
இந்தத் திட்டத்தின் மூலம் இந்த பகுதி விவசாய பயிர்களை ஆய்வு செய்த அந்த மாணவிகள் பாரம்பரிய நெல் வகைகள், சிறுதானிய பயன்கள் மற்றும் மாடி தோட்டம் அமைத்து இயற்கை வேளாண்மையை உருவாக்குவது குறித்த கண்காட்சியை நடத்தினார்கள்.
கண்காட்சியில் விவசாயிகள் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இயற்கை வேளாண்மை குறித்த சந்தேகங்களை கேட்டறிந்தனர்.
CATEGORIES தேனி
TAGS கல்விதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனி மாவட்டம்முக்கிய செய்திகள்விவசாயப் பணிகள் குறித்த விழிப்புணர்வு