தேனி மாவட்டம் சிவசேனா கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்டம் சிவசேனா கட்சியின் சார்பாக பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் ஏழை மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில்,
பாரபட்சம் பார்க்கப்படுவதாகவும் கூறி அத்தகைய குறைகளை போக்கிட மாவட்ட நிர்வாகம் விசாரணை குழுவை அமைத்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளக் கோரியும்,

பல ஆண்டுகளாக மாவட்ட தலைமை மருத்துவமனை பணியில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க கூறியும்,
மேலும் பொதுமக்கள் கோரிக்கை மற்றும் மக்கள் பிரச்சினை சம்பந்தமாக சிவசேனா கட்சியின் சார்பில் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை எவ்விதமான நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும்,

அத்தகைய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர், துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியும் அத்தகைய அதிகாரிகள் தங்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சிவசேனா கட்சியின் மாநிலச் செயலாளர் குரு ஐயப்பன் தலைமையில் கட்சியினர் தாங்கள் கொண்டு வந்த மனுக்களை கூடை நிறைய எடுத்துக் கொண்டு தலையில் சுமந்தவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் சுப்ரமணி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
