BREAKING NEWS

தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு கோவில்பட்டியில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர கழக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு கோவில்பட்டியில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர கழக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு..,

 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர கழக சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

 

நிகழ்ச்சியில் வட்டார தலைவர் ஆழ்வார்சாமி நகர செயலாளர்கள் செண்பகராஜ்,மூர்த்தி, நகர் துணை தலைவர்கள் ராஜமாணிக்கம், மதன்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன், மாணவரணி மாநில செயலாளர் முத்துராமலிங்கம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )