நன்றியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை!! அற்புதம்மாள் ஆனந்த கண்ணீர் !!
நன்றியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை!! அற்புதம்மாள் ஆனந்த கண்ணீர் !!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று இருக்கும் பேரறிவாளன் தற்போது ஜாமீனில் இருக்கிறார். 2014-ல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேரறிவாளன் 2016-ல் மனுதாக்கல் செய்து, அதன்பின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார்.இந்த வழக்கு விசாரணையில், பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யக்கூடாது? என மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

கருணை மனு மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது என குற்றவியல் நடைமுறை சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.இந்நிலையில் ராஜூவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் விடுதலை வழங்கியுள்ளது. அரசயிலமைப்பு 142 ஐ பயன்படுத்தி, சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பு குறித்து பேசிய தாயார் அற்புதம்மாள், இந்த தீர்ப்பு எப்பொழுதோ கிடைத்திருக்க வேண்டும். இது கால தாமதம்தான், ஆனால் மகிழ்ச்சி. மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்தைகள் இல்லை என்றார்.மேலும், மகனின் விடுதலைக்காக எத்தனேயோ பேர் குரல் கொடுத்திருக்கிறார்கள் அனைவருக்கும் நன்றி. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. நன்றி என்ற வார்த்தையை தவிர வேறு எதுவும் சொல்ல வார்த்தைகள் இல்லை என்று கூறினார்.பேரறிவாளன் தீர்ப்பை அடுத்து, அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் உறவினர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். கோவையில் கு.ராமகிருட்டிணன் தலைமையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம் நடந்து வருகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
