நரிக்குறவர் என்ற பெயரை நீக்க வலியுறுத்தி- குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பினர் — வாக்களர் அடையாள அட்டை, ரேஷ்ன் கார்டு உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் !!

திருப்பூர்,
மத்திய மாநில அரசு பரசுகள் பரிந்துரை செய்த நரிக்குறவர் என்ற பெயரை நீக்க வலியுறுத்தி- குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பினர் — வாக்களர் அடையாள அட்டை, ரேஷ்ன் கார்டு உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் !!
மத்திய அரசும் தமிழக அரசும் வட மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு குடிப்பெயர்ந்த வாக்ரி மொழி பேசக்கூடிய மக்களே என்ற குருவிக்காரன் சமுதாயத்திற்கு தங்களது தாய்குடி பெயரான குறவன் என்ற பெயரை சூட்டி வரலாற்று பிழையை ஏற்படுத்தி விட்டதாகவும், மத்திய மாநில அரசு பரசுகள் பரிந்துரை செய்த நரிக்குறவர் என்ற பெயரை நீக்க வலியுறுத்தியும்,
தமிழ் குறவர்களை பழங்குடியினர், எஸ்.டி பட்டியலில் சேர்த்திட மத்திய.அரசும் மாநில அரசும் பரிந்துறை செய்ய வலியுறுத்தி குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பினர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு,
ஆதார் கார்டு, வாக்களர் அடையாள அட்டை, ரேஷ்ன் கார்டு உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.முன் பரபரப்பு ஏற்பட்டது.
