நாளை பிரதமர் மோடி ஜப்பான் பயணம்! குவார் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்!
நாளை பிரதமர் மோடி ஜப்பான் பயணம்! குவார் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்!
பிரதமர் மோடி, ஜப்பானில் நடைபெற உள்ள குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டோக்கியோ செல்ல இருக்கிறார். இவரது பயணம் நாளை மற்றும் 24 ஆகிய 2 நாட்களில் நடைபெற இருக்கிறது.
நாளை ஜப்பானில் உள்ள டோக்கியோவுக்கு பிரதமர் மோடி செல்ல இருக்கிறார். அந்நாட்டு பிரதமர் புமியோ கிஷிடாவின் அழைப்பை ஏற்று இந்த பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (24ம் தேதி) டோக்கியோவில் நடைபெற உள்ள குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
இந்தியா உள்ளிட்ட நாட்டின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ள குவாட் உச்சி மாநாட்டில் இந்தோ-பசிபிக்கில் உள்ள சவால்கள் மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் குவாட் உச்சி மாநாட்டுக்கு வரும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் மற்றும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆகியோருடன் இரு தரப்பு சந்திப்புகளை பிரதமர் மோடி நடத்துவார் என்று கூறப்படுகிறது. இச்சந்திப்புகளின் மூலம் இந்தியாவுடனான நட்புறவு பலப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி ஜப்பானிய வர்த்தக சமூகம் மற்றும் புலம் பெயர்ந்த இந்தியர்களை சந்தித்து உரையாடுகிறார்.
குவாட் உச்சி மாநாடு என்பது ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு மூலோபாய பாதுகாப்பு, ஜனநாயகம், சர்வதேச சட்டம், விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு உரையாடலைக் குறிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு கடந்த 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை வெளிநாடு பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.