நெல்லையில் சாலை பாதுகாப்பு வார விழா…
சாலை பாதுகாப்பு வார விழா பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர மேற்கு காவல் துணை ஆணையாளர்.
நெல்லை மாநகரம் வண்ணாரபேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் Dr.அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து 11.01.2023 முதல் 17.01.2023 வரை நடத்தும் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு,..
நெல்லை மாநகர மேற்கு காவல் துணை ஆணையாளர் K சரவணகுமார், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் முகப்பு விளக்குகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புர்ணவு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இவ்விழிப்புணர்வு பேரணியில் 100க்கும் போக்குவரத்து ஊழியர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
உடன் பாளை சரக காவல் உதவி ஆணையாளர் பிரதீப், போக்குவரத்து கழக பணிமனை மேலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.