BREAKING NEWS

நெல்லை பகுதியில் இறைச்சி கடைகளில் ஆய்வு.

நெல்லை பகுதியில் இறைச்சி கடைகளில் ஆய்வு.

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இன்று இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

பாளையங்கோட்டை மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர் அ.ரா.சங்கரலிங்கம் இன்று பாளையங்கோட்டை பகுதியிலுள்ள இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 

சமாதானபுரம் பகுதியிலுள்ள இரு மாட்டிறைச்சி கடைகளில், முந்திய நாள் வெட்டி மீதமிருந்த மாட்டு கறி, குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்து வரப்பட்டு சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 26கிலோ மாட்டிறைச்சியை பறிமுதல் செய்து, கிருமி நாசினி தெளித்து அழித்தார்.

 

அதன் மதிப்பு சுமார் ரூபாய் 7800/- ஆகும். இத்தகைய ஆய்வுகள் திருநெல்வேலி முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட நியமன அலுவலர் மரு.இரா.சசிதீபா தெரிவித்தார்.

 

CATEGORIES
TAGS