நெல்லை மாநகர புறநகர ஜமாஅத்துல் உலமா சபை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மாநகர புறநகர ஜமாஅத்துல் உலமா சபை ஆலோசனைக் கூட்டம் டவுணை அடுத்துள்ள இராமையன்பட்டி கரீம் ஷா தைக்காவில் நடைபெற்றது

நெல்லை மாநகர புறநகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக ரபிவுல் அவ்வல் 12 நாட்கள் மீலாது தொடர் சொற்பொழிவு சம்பந்தமாகவும், ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக பொது கூட்டம் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் ஏற்பாடு செய்வது போன்ற பல்வேறு தீர்மனங்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது
இந்நிகழ்ச்சியில் மெளலவி அல்ஹாஃபிழ் M.ஜமால் முஹைதீன் ஆலிம் பாக்கவி தலைவர் நெல்லை மாநகர் புறநகர் ஜமா அத்துல் உலமா சபை, மௌலானா மௌலவி அல்ஹாஜ் B.A.K அப்துர் ரஹிம் ஆலிம் பாக்கவி கௌரவ ஆலோசகர்
நெல்லை மாநகர புறநகர ஜமா அத்துல் உலமாசபை, மௌலவி S.KS. செய்யது சுலைமான் ஆலிம் மன்பா கௌரவ ஆலோசகர் நெல்லை மாநகர புறநகர ஜமாஅத்துல் உலமாசபை, மற்றும் சபையின் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
