BREAKING NEWS

நேற்று எடப்பாடியின் முகம் கொடூரமாக இருந்தது, அதேவேளையில் OPSயின் முகம் பொன்சிரிப்போடு இருந்தது. உள்ளத்தில் இருப்பது தான் முகத்தில் தெரியும், மேலும் எடப்பாடி MGRவோ, ஜெயலலிதாவோ இல்லை, எனவே கூட்டு தலைமை தான் மீண்டும் வலுவான இயக்கமாக இருக்க முடியும் என தஞ்சையில் OPS ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி.

நேற்று எடப்பாடியின் முகம் கொடூரமாக இருந்தது, அதேவேளையில் OPSயின் முகம் பொன்சிரிப்போடு இருந்தது. உள்ளத்தில் இருப்பது தான் முகத்தில் தெரியும், மேலும் எடப்பாடி MGRவோ, ஜெயலலிதாவோ இல்லை, எனவே கூட்டு தலைமை தான் மீண்டும் வலுவான இயக்கமாக இருக்க முடியும் என தஞ்சையில் OPS ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி.

தஞ்சாவூர் அதிமுக தெற்கு மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்த OPS ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இருபெரும் தலைவர்கள் கட்டி காத்த இந்த இயகத்தை, சுயலாபத்திற்காக ஒருவர் தனக்கு கீழே இந்த இயக்கம் இருக்க வேண்டும் என நினைகின்றார் என்பது அவருடைய நேற்றைய பேட்டி மக்களுக்கு தெளியப்படுத்தியுள்ளது. EPS செய்த சூழ்ச்சிகள் மற்றும் நயவஞ்கங்கள் எல்லாத்தையும் மறந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என OPS அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை.

இந்நிலையில் EPS கொடுத்த அறிக்கையை மக்களும், தொண்டர்களும் ஏற்கவில்லை. தற்போது பொதுகுழு உறுப்பினர்கள் எங்களை நேக்கி வருகிறார்கள்.இந்த இயக்கத்தின் வாளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள், தற்போது பிரிந்து சென்றவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இதில் அவர்கள் வரக்கூடடாது, இவர்கள் வரக்கூடாது என்றில்லை, குறிப்பாக சசிகலா, டிடிவி.தினகரன் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மேல்முறையீட்டுக்கு சென்று உள்ளார்கள், அதனை நாங்கள் சந்திப்போம் என்றார். மேலும் நாங்கள் கூட்டு தலைமை தான் விரும்புகிறோம், EPS MGRவோ, ஜெயலலிதாவோ இல்லை, எனவே கூட்டு தலைமை தான் மீண்டும் வலுவான இயக்கமாக இருக்க முடியும் என்றார்.

நேற்று எடப்பாடியின் முகம் கொடூரமாக இருந்தது, அதேவேளையில் OPSயின் முகம் பொன்சிரிப்போடு இருந்தது. உள்ளத்தில் இருப்பது தான் முகத்தில் தெரியும். மேலும் OPS முக்கிய ஆவணங்களை திருட்டி சென்றுவிடதாக கூறப்பட்ட புகார் தொடர்பான கேள்விக்கு, OPS ஒருங்கிணைப்பாளர் – பொருளார் என்கிற முறையில் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு என்னென்ன ஆவணங்கள் திருடுபோயுள்ளது என அவர்கள் தெரிவிக்க வேண்டும். இந்த பிரச்சினைகள் மற்ற கட்சிகள் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை, மேலும் எங்கள் பக்கம் EPS சேராமல் போகட்டும், ஆனால் கோடான கோடி தொண்டர்கள் சேருவதற்கு தயராக உள்ளனர் என தெரிவித்தார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )