BREAKING NEWS

பசும்பொன்னில் தேவர் திருவுருவ சிலைக்கு தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அணிவிக்கப்பட்டது.

பசும்பொன்னில் தேவர் திருவுருவ சிலைக்கு தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அணிவிக்கப்பட்டது.

 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 115வது ஜெயந்தி மற்றும் 60வது குருபூஜை விழா வருகின்ற அக். 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.

 

 

 

 

இந்த நிலையில் தேவர் திருவுருவ சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பதற்காக மதுரையில் உள்ள தனியார் வங்கியில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசத்தை மாவட்ட வருவாய் துறையினர் பசும்பொன் கிராமத்திற்கு கொண்டு வந்தனர்.

 

 

 

 

 பின்னர் தேவர் திருவுருவ சிலைக்கு தங்க கவசத்தை ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ராஜசேகர், மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள்,தேவன் நினைவிட பொறுப்பாளர்கள் முன்னிலையில் அணிவிக்கப்பட்டது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )