BREAKING NEWS

பள்ளி தாளாளரால் பாதிக்கப்பட்டசிறுமிக்கு நீதி கேட்டு பாரதி ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பள்ளி தாளாளரால் பாதிக்கப்பட்டசிறுமிக்கு நீதி கேட்டு பாரதி ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் கடலூர் கிழக்கு மாவட்ட பாரதி ஜனதா கட்சியின் சார்பில்கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு பள்ளி தாளாளரால் பாதிக்கப்பட்டசிறுமிக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இதில் சிறுமிக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் ,முன்னாள் திமுக கவுன்சிலர் பத்திரிசாமியின் முதல் தகவல் அறிக்கை தவறாக கொடுக்கப்பட்டிருக்கிறது அதனை சரி செய்ய வேண்டும், பள்ளியில் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது அரசே எடுக்க பள்ளியை நடத்த வேண்டும்,

 

 

மேலும் அப்பள்ளியில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் உள்ளனாரா என்றுஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து நீதி விசாரணைசெய்ய வேண்டும், குற்றவாளிக்கு துணை போனவர்கள் யார் என கண்டறிந்து கைது செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட பள்ளி சிறுமிக்கு உடனடியாக தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் வைப்பு தொகை செலுத்த வேண்டும், போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்களிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 

இதில் நகரத் தலைவர் மணியழகன் தலைமையில் மாவட்ட தலைவர் கோவிலானூர் மணிகண்டன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் வினோஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS