BREAKING NEWS

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா‌‌ நடைபெற்றது

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா‌‌ நடைபெற்றது

திருவள்ளூர் டிஆர்பிசி சி சி இந்து மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்க நிகழ்ச்சி நடைபெற்றது
இவ்விழாவில் பால்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு சாமு நாசர் அவர்கள் கலந்துகொண்டு கூறுகையில்
மாணவ மாணவிகள் தலைசிறந்த மாணவ மாணவர்களாக வளர வேண்டும் பள்ளியின் பெயரை காப்பாற்ற நல்ல முறையில் மென்மேலும் பயில வேண்டும் என்றும் அவர் உரையாற்றினார் மேலும்
வீடு மற்றும் பொது இடங்களில் சேகரிக்கப்படுகின்ற நெகிழிப் பொருட்களை சேகரிக்கும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார் இதனைத் தொடர்ந்து
மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க
1142 மாணவ மாணவிகளுக்கு 57.75 லட்சம்
மதிப்பீட்டிலான இலவச மிதிவண்டினை பால்வளத் துறை அமைச்சர்
வழங்கினார்.

இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் அவர்கள் விழாவில் முன்னிலை வகித்தனர் விழாவில் திருவள்ளூர் ஊராட்சி குழு பெருந்தலைவர் நகர்மன்ற தலைவர் உதய மலர் பொன் பாண்டி
நகரமன்ற துணைத்தலைவர் சிசு ரவிச்சந்திரன்
மற்றும் வார்டு கவுன்சிலர் பிரபு ,டி கே பாபு, வசந்தி வேலாயுதம், அயூப் அலி ,கமலி, அம்பிகா, ஆனந்தி தனலட்சுமி, மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் மாவட்ட கல்வி துணை அலுவலர் பூபாலன் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தலைவர் அருணன்
மற்றும் தலைமை ஆசிரியர் திரு ஆர் கலைச்செல்வன் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )