BREAKING NEWS

பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலதாமதம் இன்றி சான்றிதழ் வழங்க கோரி – கோவில்பட்டியில் தமாக சார்பில் கண்ணில் பச்சை ரிப்பன் கட்டி ஆர்பாட்டம்.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலதாமதம் இன்றி சான்றிதழ் வழங்க கோரி – கோவில்பட்டியில் தமாக சார்பில் கண்ணில் பச்சை ரிப்பன் கட்டி ஆர்பாட்டம்.

தமிழகத்தில் 10 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வுகள் முடிவுகள் வெளியாகி மாணவர்கள் கல்லூரி மற்றும் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கான முயற்சிகள் எடுத்து வருகின்றான். பள்ளி கல்லூரிகளில் சேர்வதற்கும் கல்விக்காக அரசு வழங்கும் உதவிகளை பெறுவதற்கும் குடியிருப்புச் சான்றிதழ் ஜாதிச் சான்றிதழ் முதல் பட்டதாரிக்கான சான்றிதழ் என ஆவணங்கள் தேவைப்படுகிறது இதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்தனர்.

ஆனால் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகள் இப்பணியில் சுணக்கம் காட்டுவதாகவும் காலதாமதம் செய்வதாகவும் ஆன்லைனில் பதிவு செய்தாலும் நேரில் பார்த்தால் மட்டும் தான் விரைந்து சான்றிதழ் வழங்கப்படும் என்ற நிலை உள்ளது இதனால் பெற்றோர்களும் மாணவர்களும் மிகுந்த என்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனைக் கண்டித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் நகரத் தலைவர் ராஜகோபால் தலைமையில் கண்ணில் பச்சை ரிப்பன் கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

இதனை எடுத்து கோட்டாட்சியர் மகாலட்சுமியை சந்தித்து மனு அளித்தனர். மனுவின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

Share this…

CATEGORIES
TAGS