பழனியை அடுத்துள்ள பெரிய கலையமுத்துரில் இந்திரா நகரில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 65வது நினைவு நாளை முன்னிட்டு திருவுருவ புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள பெரிய கலையமுத்துரில் இந்திரா நகர் காலனியில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 65வது நினைவு நாளை முன்னிட்டு அன்னாரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தங்கம் தலைமை தாங்க, லட்சுமணன் பெருமாள் முன்னிலை வகித்தார்.
மேலும் மேற்கு ஒன்றிய செயலாளர் இருளாண்டி, கோவிந்தராஜ் ,அ,காளி, கவுன்சிலர், நரசிங்க பெருமாள், காளிதாஸ், திவாகர், சின்னத்துரை, பி.நாகராஜ் ஈஸ்வரன், மற்றும் ஆதித்தமிழர் கட்சி பழனி மணி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
CATEGORIES திண்டுக்கல்
