பழனி ஆயக்குடியில் திருட்டுப் போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு வருடமாக காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக சுமார் ஐந்தரை லட்சம் மதிப்புடைய விலை உயர்ந்த 26 செல்போன்கள் ஆயக்குடி காவல் துறையினரால் மீட்கப்பட்டது .கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டு இருந்த செல்போன்களின் ஐ எம் ஐ எண்களை வைத்து செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து பழனி டிஎஸ்பி சிவ சக்திவேல் ,ஆயக்குடி இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் செல்போன் பறி கொடுத்தவர்களிடம் செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டது. இதில் துரிதமாக செயல்பட்டு செல்போன்களை மீட்ட பயிற்சி சார்பு ஆய்வாளர் சண்முகவடிவேல் முருகனை அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
தொடர்ந்து செல்போனை பெற்றுக் கொண்டவர்கள் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.