BREAKING NEWS

பழனி பாதயாத்திரை குழுவினர்கள் உடுமலைப்பேட்டை பகுதியில் பொது மக்களுக்கும் அன்னதானம்.

பழனி பாதயாத்திரை குழுவினர்கள் உடுமலைப்பேட்டை பகுதியில் பொது மக்களுக்கும் அன்னதானம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த ஆலம்பாளையம் அருகே அமரவேல் ராஜலட்சுமி அவர்களின் தோட்டத்து சாலையில் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பழனி பாதயாத்திரை குழுவினர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் தங்கி சாலையில் முருகன் கடவுளுக்கு சிறப்பு பூஜைகள் அலங்காரம் செய்து பின்பு காவடி ஆட்டம் ஆடியும் பக்தி பாடல்கள் பாடியும் தரிசனம் செய்து உணவு அருந்திவிட்டு அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்கினார்கள்.

 

 

இந்நிகழ்ச்சியில் காவடி குழுவினர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தோட்டத்து சாலை உரிமையாளர் அமரவேல், ராஜலட்சுமி குடும்பத்தினர் சுந்தர்ராஜ், 
லலிதாமணி, மாணிக்கவாசகம், மற்றும் அவர்களது உறவினர்கள் ஆகியோருக்கு அருள் பிரசாதங்களை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்து பழனி பாதயாத்திரையாக புறப்படும்போது அனைவருக்கும் நன்றி கூறி புறப்பட்டனர்.

 

ஆண்டுதோறும் ஒவ்வொரு பங்குனி மாதமும் இப்பகுதியில் சிறப்பாக நடைபெறும் காவடி குழுவினர்கள் விழாவினை அமரவேல் தம்பதியினர் சிறப்பாக நடத்தி அவர்களை வலியுறுத்தி வைப்பது குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS