பவானியில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது.
![பவானியில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது. பவானியில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது.](https://aramseithigal.com/wp-content/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-22-at-2.21.06-PM.jpeg)
பவானி நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் திருப்பூர் எம்.பி. சுப்பராயன் உள்ளூர் வளர்ச்சி நிதி ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்புவிழா ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
பவானி நகரமன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருப்பூர் எம்பி சுப்பராயன் கலந்து கொண்டு ரேசன் கடையை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பவானி நகர திமுக செயலாளர் நாகராசன், நகராட்சி ஆணையாளர் பொறுப்பு கதிர்வேல், நகரமன்ற துணை தலைவர் மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகி மாதேஸ்வரன், பவானி நகர செயலாளர் பாலமுருகன், முன்னால் நகர் செயலாளர்,
சந்திரசேகர், திமுக நகர அவைத்தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட பிரதிநிதி நல்லசிவம் மற்றும் திமுக கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.