பாண்டி முனீஸ்வரர் கோவில் திருவிழா கிடாவெட்டி வெகு விமரிசையாக கொண்டாடபட்டது.

பிச்சம்பட்டி விலக்கில் உள்ள பாண்டி முனீஸ்வரர் கோவில் திருவிழா கிடாவெட்டி வெகு விமரிசையாக கொண்டாடபட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஆசாரிபட்டி சாலையில் உள்ள பிச்சம்பட்டி விலக்கு பகுதியில் பாண்டி முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் ஆவணி மாதத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

அதன்படி இந்த வருடம் இரண்டு நாள் திருவிழாவாக நடைபெற்ற பாண்டி முனீஸ்வரன் கோவிலின் சக்தி பூஜை விழாவில் காப்பு கட்டி ஏராளமான பக்தர்கள் ஒரு மண்டலம் விரதமிருந்து நேற்று இரவு கிடா வெட்டி பூஜை செய்தனர். பின்னர் இரண்டாம் நாளான இன்று பாண்டி முனீஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யபட்டு ஆராதனை காட்டபட்டது.

பாண்டி முனீஸ்வரரை அப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பக்தர்களுக்கு இரண்டாம் நாள் அன்னதானமாக கிடாவெட்டி காலை முதல் மாலை வரை அன்னதானமாக ஏராளமான நபர்களுக்கு வழங்கபட்டது

இந்த விழா ஏற்பாடுகளை கோத்தலுத்து ஊராட்சி செயலரும் கோவில் நிர்வாகதஸ்தருமான மார்கண்டேன் செய்திருந்தார் மேலும்
இந்த விழாவில் அமமுக வடக்கு ஒன்றிய இணை செயலாளர் அய்யணன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
