பிரபல காமடிநடிகர் செந்தில் 70வது வயதை முன்னிட்டு பீமரத சாந்தி எனப்படும் 70 வயது திருமணம் நடைபெற்றது.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பிரபல காமடிநடிகர் செந்தில் 70வது வயதை முன்னிட்டு பீமரத சாந்தி எனப்படும் 70 வயது திருமணம், உறவினர்கள் புடை சூழ தனது மனைவிக்கு மாலை மாற்றி சுவாமி அம்பாள் தரிசனம் செய்தார்:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயருக்காக எமனை சம்ஹாரம் செய்த தலம் ஆதலால் இது அட்ட விரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
இதனால் இங்கு ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமங்கள் செய்து 60 வயதில் சஸ்டியப்தபூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம்,, 90 வயதில் கனகாபிஷேகம், 100 வயதில் பூரணாபிஷேகம் உள்ளிட்ட திருமணங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் இக்கோயிலில் தினந்தோறும் வருடம் முழுவதும் திருமண வைபவங்கள் நடைபெறுவது வழக்கம்.
பல்வேறு சிறப்புகளையுடைய இவ்வாலயத்தில் திரைப்பட காமடிநடிகர் செந்தில் 70வது வயதை முன்னிட்டு பீமரத சாந்தி திருமணவிழா நடைபெற்றது. நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்வி, மகன்கள் மணிகண்டபிரபு, மிரிதிபிரபு மற்றும்’ குடும்பத்தினருடன் திருமணம் செய்து கொள்வதற்காக கோவிலுக்கு வந்து. கஜபூஜை, கோபூஜை செய்து சுவாமி அம்பாளை வழிபட்டு இரண்டுகால யாகசாலை பூஜையில் பங்கேற்றனர்.
64 கலசங்கள் வைக்கப்பட்டு இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று பீமரதசாந்தி என்றழைக்கப்படும் 70வது திருமணம் நடைபெற்றது.
புனித கலசங்கள் அடங்கிய நீரைக் கொண்டு நடிகர் செந்தில் மற்றும் அவரது மனைவிக்கு கலசபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து வேதியர்கள் மந்திரம் முழங்க இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டனர் அவருக்கு தர்மபுரம் ஆதீனத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.