புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா! அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்கள் திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழாவில் வேலூர் மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.

அவருடன் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு ஒன்றிய செயலாளர்கள் P.வெங்கடேசன் கோ.குமாரபாண்டியன்,
ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.கீதா வெங்கடேசன் ஒன்றிய குழு பெருந்தலைவர் C.பாஸ்கரன் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.
CATEGORIES வேலூர்
