புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை மங்களூர் சேர்மன் சுகுணா சங்கர் திறந்து வைத்தார்.

– கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.
கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட புல்லூர் கிராமத்தில் புதிதாக 23 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை, தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்களின் வழிகாட்டுதல்படி..
மங்களூர் ஒன்றிய பெருந்தலைவர் சுகுணா சங்கர் ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சூர்யா பாஸ்கர் தலைமை தாங்கினார், மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் முன்னிலை வகித்தார். ஒப்பந்ததாரர் மஞ்ச முத்து வரவேற்றார்.
துணைத் தலைவர் சுப்ரமணியன், வார்டு உறுப்பினர்கள் லட்சுமி, நடராஜன், பார்வதி, தங்கம் மஞ்சுளா மற்றும் தூய்மை பணியாளர்கள் டேங்க் ஆபரேட்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் நன்றி உரையாற்றினார்.