BREAKING NEWS

புரோ கப் மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திண்டுக்கல் ஐ.லியோனி பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

புரோ கப் மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திண்டுக்கல் ஐ.லியோனி பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

புரோ கப் மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடடு பாடநூல் கழக தலைவரும் ,பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் ஐ.லியோனி பாராட்டி பதக்கங்கள் வழங்கினார்.

 

தென்காசியில் செப்டம்பர் 2 ,3, 4 ஆம் தேதிகளில் நடைபெற்ற முதலாவது புரோ கப் மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டி நடைபெற்றது.

 

Pee-wee சப் ஜூனியர், கேடட் ,ஜூனியர், சீனியர் என பிரிக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

 

இதில் திண்டுக்கல் மாவட்டம் பிரின்ஸ் தேக்வாண்டோ கிளப் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 11 தங்கம்,12 வெள்ளி, 24 வெண்கல பதக்கங்களை வென்றனர்.

 

இவர்களுக்கான பாராட்டு விழாவில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டி பதக்கங்கள் வழங்கினார்.

 

இந்நிகழ்வில் எமக்கலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பயிற்சியாளர் மாஸ்டர் ஜெயசீலன் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )