BREAKING NEWS

பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் சிறுமி ஒருவர் பூட்டி கிடக்கும் பூங்காவை திறந்து வைக்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் சிறுமி ஒருவர் பூட்டி கிடக்கும் பூங்காவை திறந்து வைக்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் சிறுமி ஒருவர் பூட்டி கிடக்கும் பூங்காவை திறந்து வைக்ககோரி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப்பிடம் கோரிக்கை மனு அளித்தது அமர்ந்திருந்த பொது மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தியது.

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் , மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.இராஜேந்திரன், ஆகியவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு

கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல் இணையவழி மனைப் பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுயசான்றிதழினை அடிப்படையாகக் கொண்டு கட்டிட அனுமதி பெறுதல் வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழி செலுத்து வதை உறுதிப்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்பொழுது அப்பகுதி சார்ந்த சிறுமி ஒருவர் கையில் ஒரு கோரிக்கை மனு ஒன்றை எடுத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளார்

மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் விரைவில் பூட்டி கிடக்கும் சிறுவர் பூங்காவை குழந்தைகளின் பயன்பாட்டுகளுக்காக திறந்து வைப்பதாக உறுதியளித்து அங்கு அமர்ந்திருந்த பொது மக்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

முன்னதாக பல்வேறு துறைகளில் மூலம் அவர்களது திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார்,

பின்னர் வேளாண்மை துறை சார்பில் 6 விவசாயிகளுக்கு ரூ 10169 மதிப்பிலான வேளாண் உபகரணங்களும், தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரமேஷ். திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மோதிலால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரதராஜ், சுலோச்சனா, மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன்,

ஒன்றிய பொறியாளர் பால்ராஜ், பணி மேற்பார்வையாளர் துரைராஜ், மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS