BREAKING NEWS

பெல் நிர்வாகம் தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ய சொல்வதை கண்டித்து தொழிற்சங்கம் சார்பில் பெல் கேட் முன்பு வாயிற்கூட்டம் நடந்தது.

பெல் நிர்வாகம் தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ய சொல்வதை கண்டித்து தொழிற்சங்கம் சார்பில் பெல் கேட் முன்பு வாயிற்கூட்டம் நடந்தது.

திருச்சி,

கூட்டத்திற்கு ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகி நடராஜன் தலைமை வைத்தார்.
திக முன்னாள் மாவட்ட தலைவர் சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வாயிற் கூட்டத்தில் பெல் தொழிற்சாலையில் சுமார் 40 வருடங்களாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வரும் தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளை பெல் குடியிருப்பு வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று வந்தனர்.

 

 

இந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டுமென பெல் நிவாகம் கூறியுள்ளது.

 

இதற்கு பெல் ஒப்பந்த தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இது சம்பந்தமாக கடந்த 18ஆம் தேதி பெல் நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் பெல் வளாகத்திற்கு உள்ளேயே மருத்துவமனை இருக்கும் பொழுது எதற்காக தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியதை தொடர்ந்து,..

 

 

பெல் நிறுவனம் நீங்கள் தனியார் மருத்துவமனைக்கு பதிலாக பெல் மருத்துவமனையிலேயே பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என உறுதி அளித்த நிலையில், கடந்த 21ஆம் தேதி பில் நிர்வாகம் மீண்டும் ஒப்பந்த தொழிலாளர்களை தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற வேண்டுமென கூறுவதை கண்டித்து வாயர் கூட்டம் நடந்தது.

 

 

இதில் பெல் நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டால் அடுத்த கட்ட போராட்டத்திற்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை என வாயிற் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் திக பெல் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தொமுச ஒப்பந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )