பேரணாம்பட்டில் புதிய கிராம உதவியாளர்கள் பதவியேற்பு.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு தாலுகாவில் காலியாக இருந்த மூன்று கிராம உதவியாளர் பதவிக்கு தேர்வு நடைபெற்றது.
இதில் அறிவழகன், பாஸ்கர், திவ்யா, ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டு புதிய கிராம உதவியாளர்களாக பதவியேற்று கொண்டனர். இவர்களுக்கு பேரணாம்பட்டு தாசில்தாரர் எம். நெடுமாறன், மண்டல தலைமை இடத்து துணை தாசில்தாரர் தனலட்சுமி, தலைமை சர்வேயர், ஹரி கிருஷ்ணன்,
மேல்பட்டி வருவாய் ஆய்வாளர், சரஸ்வதி, கிராம நிர்வாக அலுவலர்களான எம்.உதயகுமார், மூர்த்தி, மேகநாதன், எம் .சௌந்தரி, அன்பரசன், துரைமுருகன், கோபிநாத், சிவராமன், எம்.ஜெயக்குமார், கிராம உதவியாளர்களான வெங்கடேச பாபு, சத்தியநாதன், கோபால், சுந்தரேசன், சின்னசாமி, கே.நாகப்பன், மனோகரன், வரதன், உள்பட மற்றும் பலர் வாழ்த்து கூறினர்.
CATEGORIES வேலூர்
TAGS கிராம உதவியாளர் பதவி தேர்வுதமிழ்நாடுதலைப்பு செய்திகள்பேரணாம்பட்டுமுக்கிய செய்திகள்வேலூர் மாவட்டம்