பேரணாம்பட்டு நகர பாஜக ஓ பி சி அணி சார்பில் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் முகாம்.

வேலூர் மாவட்டம்; பேரனாம்பட்டு நகர பாஜக ஓபிசி அணி சார்பில் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் முகாம் பேரணாம்பட்டில் உள்ள பாரத் வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பேரன் பட்டு நகர பாஜக ஓபிசி அணி நகர தலைவர் ஜி கந்தன் தலைமை தாங்கினார்.
நகர பாஜக ஓ பி சி அணி நிர்வாகிகளான எஸ் வெங்கடேசன், கே ராமு, வி காயத்ரி ,எம் தரணி, பி கண்ணையன், ஜி முருகன் ,எம் கோவிந்தராஜ், ஜி ரமேஷ், பி கோபிநாத், ஜே ரமேஷ், எஸ் சங்கர், எஸ் ராஜா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். இதில் வேலூர் மாவட்ட பாஜக ஓபிசி அணியின் தலைவர் கே நந்தகுமார்,
பாஜக ஓபிசி அணியின் பார்வையாளர். எம் பரந்தாமன். ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்த முகாமில் 60 நபர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES அரசியல்
TAGS அரசியல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பாஜகபாஜக ஓபிசி அணி சார்பில் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் முகாம்முக்கிய செய்திகள்வேலூர்வேலூர் மாவட்டம்